ADDED : ஜூன் 01, 2025 11:52 PM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே கடன் தொல்லையால் வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம், பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் ராம்குமார்,35; இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். இவர், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இதற்கு தேவையான பணத்தை பலரிடம் பல லட்சம் கடனாக பெற்றார்.
கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டு தகராறு செய்தனர். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 3 நாட்களுக்கு முன் வீட்டில் பூச்சி மருந்து மயங்கி விழுந்தார். உடன், குடும்பத்தினர் மீட்டு புதுச்சேரி ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு சிகிக்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.
பணம் கொடுத்தவர்கள் தொல்லை கொடுத்ததால் தான் ராம்குமார் இறந்ததாகவும், சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை கோரியும் உறவினர்கள் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.