/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பழுதடைந்த தார்சாலை: பொதுமக்கள் அவதி
/
பழுதடைந்த தார்சாலை: பொதுமக்கள் அவதி
ADDED : நவ 10, 2025 03:50 AM

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையத்திலிருந்து கீழ்மாம்பட்டு செல்லும் தார்சாலை பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம், புத்திரன்குப்பத்திலிருந்து கீழ்மாம்பட்டு செல்ல குறுக்கு சாலை உள்ளது.
மொத்தம், 3 கி.மீ., துாரம் உள்ள இந்த தார்சாலை ஒரு பாதி கடலுார் ஒன்றியத்திலும், மறு பாதி பண்ருட்டி ஒன்றியத்திலும் உள்ளது. பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள ஒன்றரை கிலோ மீட்டர் தார்சாலை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. ஆனால் கடலுார் ஒன்றியத்தில் உள்ள சாலையை அதிகாரிகள் கண்டுகொள்வதேயில்லை.
இந்த சாலை வழியில் பல ஏக்கர் பரப்பளவில் முந்திரி பயிரிடப்பட்டுள்ளது. இந்த முந்திரி மரங்களுக்கான உரங்களை இந்த சாலை வழியாக தான் விவசாயிகள் எடுத்து செல்கின்றனர். சி.என்.பாளையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ளவர்கள் கீழ்மாம்பட்டு, சாத்திப்பட்டுக்கு செல்ல இந்த சாலை மிகவும் எளிய வழி என்பதால், பொதுமக்கள் அதிகளவு இதை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் தற்போது இந்த சாலை மோசமாக குண்டும், குழியுமாக உள்ளதால், பொதுமக்களால், பயணிக்க முடியவில்லை. இதனால் இப்பகுதியில் ஆக்கிரமிப்பும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தரமான சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

