/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குப்பை எடுக்கும் வாகனங்கள் 'தொடர்ந்து' சிறை பிடிக்கும் மக்கள்
/
குப்பை எடுக்கும் வாகனங்கள் 'தொடர்ந்து' சிறை பிடிக்கும் மக்கள்
குப்பை எடுக்கும் வாகனங்கள் 'தொடர்ந்து' சிறை பிடிக்கும் மக்கள்
குப்பை எடுக்கும் வாகனங்கள் 'தொடர்ந்து' சிறை பிடிக்கும் மக்கள்
ADDED : நவ 10, 2025 03:51 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில், குப்பை எடுக்கும் வாகனங்களை, பொதுமக்கள் தொடர்ந்து சிறை பிடித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பம் நகராட் சி பகுதியில் சேரும் குப்பைகளை பல ஆண்டுகளாக திருக்குளத்தில் உள்ள குப்பை கிடங்கில் சேமித்து வந்தனர். அங்கு சேமித்த குப்பையை தரம்பிரித்து அகற்றும் பணி நடப்பதால் அங்கு குப்பையை சேமிக்க முடியவில்லை.
மேல்பாதியில் உள்ள இடத்திலும், மக்கள் எதிர்ப்பால் குப்பையை சேமிக்க முடியவில்லை. சரவணபுரம் சாலையில் குப்பையை மலைபோல் குவித்து வந்தனர்.
கடந்த, 7ம் தேதி அங்கு குப்பை கொட்ட சென்ற வாகனத்தை மக்கள் சிறை பிடித்து அங்குள்ள கோவில் வளாகத்தில் நிறுத்தினர். 3 நாட்களாகியும் அந்த வாகனத்தை மீட்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று அதே இடத்தில் குப்பை கொட்ட சென்ற, 2 வாகனங்களை சிறை பிடித்து சாவியை எடுத்து சென்றனர்.
அப்பகுதியில் மலைபோல் குவித்துள்ள குப்பையை அகற்றினால் மட்டுமே, 3 வாகனங்களையும் விடுவிப்போம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.