/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொள்முதல் பணியில் தொய்வு: மழையில் வீணாகும் நெல் மூட்டைகள்
/
கொள்முதல் பணியில் தொய்வு: மழையில் வீணாகும் நெல் மூட்டைகள்
கொள்முதல் பணியில் தொய்வு: மழையில் வீணாகும் நெல் மூட்டைகள்
கொள்முதல் பணியில் தொய்வு: மழையில் வீணாகும் நெல் மூட்டைகள்
ADDED : ஆக 04, 2025 07:21 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் முறையாக கொள்முதல் செய்யாததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பத்தில் நேர டி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. தனியார் வியாபாரிகளை விட அரசு கொள்முதல் நிலையத்தில் கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் அதிகளவு நெல் எடு த்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக அறுவடை பணி அதிகம் நடப்பதாலும் முறையாக கொள்முதல் செய்யாததாலும் 6 ஆயிரம் மூட்டைக்கு மேல் நெல் கொள்முதல் செய்யப்படாமல் குவிந்துள்ளது. இதனால், விவசாயிகள் நெல் மூட்டை களை தார்பாய் மூலம் பாதுகாத்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் பெய்த மழையால் நெல் மூட்டைகள் சிறிதளவு நனைந்தது. மழையில் நனைந்த நெல்லை வெயிலில் காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட் டுள்ளனர். முறையாக கொள்முதல் செய்திருந்தால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்திருக்காது.
மேலும், சில நாட்களுக்கு மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடுவீரப்பட்டு சி.என்.பாளையத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சி.என்.பாளையம், பாலுார், பத்திரக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் விளையும் நெல்களை விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இங்கு ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாமல் உள்ளது. திடீர் பெய்த மழையில் நெல் மூட்டைகள் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

