/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரி வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட கோரிக்கை
/
புவனகிரி வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட கோரிக்கை
ADDED : மார் 14, 2024 05:28 AM
புவனகிரி : புவனகிரி வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட தமிழக அரசை வலியுறுத்தி, கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சேர்மன் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர் தலைமை தாங்கினார். துணை ஆணையர் (நிர்வாகம்) ரமேஷ் வரவேற்றார்.
துணை சேர்மன் காஷ்மீர்செல்வி, ஆணையாளர்கள் மோகன்ராஜ், வீரமணி முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கவுன்சிலர்கள் கோரிக்கைகளை தொடர்ந்து, ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதி பாசன வாய்க்கால்களை கோடை காலத்திற்குள் துார்வார வேண்டும், புவனகிரி வெள்ளாற்றில் உப்புநீர் புகுவதால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதை தடுக்க, ஆதிவராகநல்லுாரில் தடுப்பணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவரை எழுத்தர், டிரைவர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது, சாலை வசதிகள் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க கூடுதல் நிதி ஒதுக்கி, குடிநீர் திட்டங்களை செயல்படுத்த அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

