/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மணல் திருட்டு அதிகரிப்பு கட்டுப்படுத்த கோரிக்கை
/
மணல் திருட்டு அதிகரிப்பு கட்டுப்படுத்த கோரிக்கை
ADDED : அக் 06, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி பகுதியில் மணல் திருட்டை கட்டுப்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புவனகிரி, மருதுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் ஆற்றில் மணல் திருட்டு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் காரணமாக மணல் கடத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.
எனவே, மணல் திருட்டை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.