/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் தட்டுப்பாடு சரி செய்ய கோரிக்கை
/
குடிநீர் தட்டுப்பாடு சரி செய்ய கோரிக்கை
ADDED : நவ 19, 2024 07:11 AM
வேப்பூர்; வேப்பூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய கூடுதல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேப்பூர் அடுத்த ஐவதுகுடி கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் வசதிக்காக 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன.
அதிக மக்கள்தொகை கொண்ட இங்கு, 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மட்டுமே உள்ளது. இதன் மூலம் 1 மணிநேரத்திற்கு ஒரு தெரு என்கிற வீதம் ஊராட்சி நிர்வாகம் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்கிறது.
இதனால், அப்பகுதியில் போதிய குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் தினசரி அவதியடைகின்றனர்.
எனவே, ஐவதுகுடி கிராமத்தில் கூடுதல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி, குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

