/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை
/
தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை
ADDED : பிப் 05, 2024 04:08 AM

கடலுார் : கடலுாரில் நடந்த பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை தினக்கூலி பணியாளர்கள் சார்பில் பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கடலுார் டவுன்ஹாலில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை தினக்கூலி பணியாளர்கள் நலச்சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. சங்க மாநில தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முருகானந்தம் வரவேற்றார். தமிழ்நாடு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் அமிர்தகுமார் சிறப்புரையாற்றினார்.
நிர்வாகிகள் சரவணகுமரன், முரளி, சுரேஷ், சையது அபுதாகிர், முருகப்பாண்டியன், செங்கேணி, பழனி, ராஜசேகரன் பேசினர்.
கூட்டத்தில், பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையில் கடந்த 28 ஆண்டுகளாக தினக்கூலியாக பணியில் உள்ள 1,458 பேரை, அரசு பணிவரன்முறை செய்து, நிரந்தரம் செய்ய வேண்டும். பணியின்போது உயிரிழக்கும் ஊழியர் குடும்பத்திற்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என, அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் சந்திரகுமார், ரமேஷ், கிருஷ்ணமூர்த்தி, செந்தில்வேல், சீதாலட்சுமி, ஜான்ராஜ், பாலா, செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

