தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாற்றுத்திறனாளி உதவித்தொகை கோரி; பிச்சை எடுக்கும் போராட்டம்

மாற்றுத்திறனாளி உதவித்தொகை கோரி; பிச்சை எடுக்கும் போராட்டம்

மாற்றுத்திறனாளி உதவித்தொகை கோரி; பிச்சை எடுக்கும் போராட்டம்


UPDATED : அக் 21, 2026 07:11 PM

ADDED : அக் 21, 2026 07:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 07:11 PM ADDED : அக் 21, 2026 07:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திட்டக்குடி: திட்டக்குடியில் தாலுகா அலுவலம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளி ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

திட்டக்குடி அடுத்த சிறுமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் முல்லைநாதன், 45. மாற்றுத்திறனாளி. இவருக்கு 2 தனியார் வங்கிகள். 1 தபால் நிலைய வங்கி கணக்கு மற்றும் 1 கூட்டுறவு வங்கி கணக்கு உள்ளது. இவரது மாற்றுத்திறனாளி உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் தபால் நிலைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் செப்டம்பர், அக்டோபர் மாத உதவித்தொகை வங்கி கணக்கிற்கு வரவு வரவில்லை. கூட்டுறவு வங்கி கணக்கை தவிர மற்ற வங்கி கணக்கில் ஆய்வு செய்தபோது பணம் வரவு வைக்கப்படவில்லை.

இதுகுறித்து, கலெக்டர், ஆர்.டி.ஓ., மற்றும் திட்டக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாருக்கு ஆன்லைன் மூலம் முல்லைநாதன் புகார் அளித்தார். நடவடிக்கை இல்லை.

இதனை கண்டித்து நேற்று காலை 10:30 மணியளவில் முல்லைநாதன் திட்டக்குடி தாலுகா அலுவலம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவலறிந்து வந்த, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், முல்லைநாதனிடம் சமாதானம் பேசினார். அதில், தங்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது என பதிவேட்டில் உள்ளதை முன்லைநாதனிடம் காண்பித்தார்.

ஆனால், தபால் நிலைய வங்கி கணக்கிற்கு பதில், கூட்டுறவு வங்கி கணக்கிற்கு உதவித்தொகை மாறி வந்தது முல்லைநாதனுக்கு பின்னர் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, பகல் 11:00 மணியளவில் முல்லைநாதன் அங்கிருந்து கலைந்து சென்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us