/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அலுவலக கட்டடம் இடிக்கும் பணி கோஷ்டி பூசலால் தற்காலிக நிறுத்தம்
/
அலுவலக கட்டடம் இடிக்கும் பணி கோஷ்டி பூசலால் தற்காலிக நிறுத்தம்
அலுவலக கட்டடம் இடிக்கும் பணி கோஷ்டி பூசலால் தற்காலிக நிறுத்தம்
அலுவலக கட்டடம் இடிக்கும் பணி கோஷ்டி பூசலால் தற்காலிக நிறுத்தம்
ADDED : அக் 05, 2024 04:33 AM

புவனகிரி : புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பழுதடைந்துள்ளதால், அதனை இடித்துவிட்டு, புதிதாக கட்ட ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனையொட்டி, புதிய கட்டடம் கட்ட ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட திட்டத்தில் ரூ. 5.59 கோடி நிதி ஒதுக்கி, டெண்டர் விடப்பட்டது.
அதனையொட்டி, பழைய கட்டடத்தை இடிக்கும் பணி நேற்று துவங்கியது.
புதிய கட்டடம் கட்டுவதற்கு டெண்டர் எடுத்தவர் நான் தான் இடிப்பேன் என போட்டிக்கு பொக்லைன் இயந்திரத்துடன் ஒன்றிய அலுவலகத்திற்கு தன் ஆதரவாளர்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நாங்கள் தான் இடிப்போம் என போட்டா போட்டி ஏற்பட்டது.
புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின் உயரதிகாரிகள் உத்தரவின் பேரில் கட்டடம் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.