/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனுமதியில்லாத கட்டடம் இடித்து அகற்றும் பணி
/
அனுமதியில்லாத கட்டடம் இடித்து அகற்றும் பணி
ADDED : செப் 27, 2025 02:44 AM
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் நகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை, அதிகாரிகள் இடித்து அகற் றும் பணியில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் பாலக்கரை அருகே நகராட்சி அனுமதியின்றி, ரமேஷ் என்பவர் புதிதாக கட்டடம் கட்டினார்.
இதுகுறித்து, விருத்தாசலத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அதன்பேரில், கடந்த மே மாதம் கட்டடத்திற்கு 'சீல்' வைக்க நகராட்சி நிர்வாகத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதைத்தொடர்ந்து நகராட்சி கமிஷனர் பானுமதி தலைமையில், நகரமைப்பு அலுவலர் செல்வம், நகரமைப்பு ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர், கடந்த மே 26ம் தேதி 'சீல்' வைத்தனர்.
மேலும், இந்த கட்ட டத்தை குறிப்பிட்ட காலத் திற்குள் இடித்து அகற்றவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், கட்டட உரிமையாளர் இடித்து அகற்ற முன்வராததால், கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி இடித்து அகற்றும் பணியில் ஈடுட்டனர். பின்னர் பணியை கைவிட்டனர்.
இந்நிலையில், காமராஜ் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதனைத் தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகள் நேற்று ராட்சத இயந்திரம் மூலம் கட்டடத்தை இடித்து அகற் றும் பணியில் ஈடுபட்டனர்.