/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேதமான என்.எல்.சி., குடியிருப்புகள் இடிக்கும் பணி துவக்கம்
/
சேதமான என்.எல்.சி., குடியிருப்புகள் இடிக்கும் பணி துவக்கம்
சேதமான என்.எல்.சி., குடியிருப்புகள் இடிக்கும் பணி துவக்கம்
சேதமான என்.எல்.சி., குடியிருப்புகள் இடிக்கும் பணி துவக்கம்
ADDED : மே 22, 2025 11:33 PM

நெய்வேலி: என்.எல்.சி., யில் சேதமடைந்த பணியாளர்கள் வீடுகளை இடிக்கும் பணிகள் துவங்கியது.
நெய்வேலி என்.எல்.சி.,யில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்களும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இதுமட்டுமின்றி 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தம் மற்றும் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
என்.எல்.சி., நிரந்தர பணியாளர்கள் மற்றும் பெரும்பாலான இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் மட்டுமின்றி வர்த்தகர்களும் என்.எல்.சி., குடியிருப்புகளில் வசிக்கின்றனர். என்.எல்.சி., நகர நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நெய்வேலி நகரில் 20,000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 1500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இதில் 50 ஆண்டுகளை கடந்த நுாற்றுக்கணக்கான வீடுகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது நெய்வேலி நகரில் காலியாக உள்ள வீடுகளில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக என்.எல்.சி., நகர நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன்படி, என்.எல்.சி., நகர நிர்வாகத்தின் சார்பில், சேதமடைந்த வீடுகளை இடிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முதல்கட்டமாக. நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 2 ல் காலியாக உள்ள என்.எல்.சி., குடியிருப்புகளை இடிக்கும் பணிகள் துவங்கியது.