/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அமரன் படத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
அமரன் படத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 11, 2024 04:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பத்தில் அமரன் திரைப்படத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அமரன் திரைப்படம் எடுத்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயன் கதாயாகனாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்திருப்பதாக முஸ்லிம் அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் இஸ்லாமிய இளைஞர்கள் கூட்டமைப்பினர், சதாம் தலைமையில் அமரன் திரைப்படத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த படத்தை தடை செய்ய வேண்டும்.
தயாரிப்பாளர் கமலஹாசன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனை கண்டித்து கோஷம் எழுப்பினர்.