UPDATED : அக் 29, 2026 10:35 PM
ADDED : அக் 29, 2026 10:32 PM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை எதிரில் தொ.மு.ச., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ், 10 சதவீதம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். வெற்றி பயண பஸ்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் தினப்படி, வசூல் படியை உயர்த்தி வழங்க வேண்டும்.
பஸ்களின் பராமரிப்பை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சிறப்பு தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். தலைவர் பிரேம்குமார் வரவேற்றார்.
மத்திய சங்க நிர்வாகிகள் ஞானவேல், தில்லைகோவிந்தன், முரளிதரன் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் ஆனந்தன் கண்டன உரையாற்றினார். பொருளாளர் செந்தில்மோகன் நன்றி கூறினார்.
