ADDED : அக் 18, 2024 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடியில் இந்திய கம்யூ., மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய சங்க துணை செயலாளார் ராமசாமி தலைமை தாங்கினார்.
இந்திய கம்யூ., மாவட்ட நிர்வாகி சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் நல்லுார் முருகையன், மங்களூர் உலகநாதன், மாவட்டக்குழு கோவிந்தராசு உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், திட்டக்குடி அடுத்த அருகேரி ஊராட்சிக்குட்பட்ட மேலநெமிலி, கீழநெமிலியில் பாரபட்சம் இன்றி அரசு நிலங்களை அளவீடு செய்ய வேண்டும்.
மாரியம்மன் கோவில் அருகே புதிய பாலம் கட்ட வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.