/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் பாரதிய மஸ்துார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
கடலுார் பாரதிய மஸ்துார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 19, 2024 11:44 PM

கடலுார்: கடலுாரில், என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு இ.பி.எஸ் பென்ஷன் தொகை உயர்த்தி வழங்க கோரி, பாரதிய மஸ்துார் சங்க தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெய்வேலி என்.எல்.சி., பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில் தொழிலாளர்களுக்கு இ.பி.எஸ். பென்ஷன் தொகை ரூ.1000ல் இருந்து ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். என்.எல்.சி. ஒப்பந்த மஸ்துார்சங்கத் தலைவர் அருள்முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் விக்னேஸ்வரன் வரவேற்றார். பொதுச் செயலாளர் சகாதேவ் ராவ் கண்டன உரையாற்றினார்.
சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், கருப்பன், சங்கர், செந்தில்வேல், ராஜா, வள்ளல், லோகநாதன், துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொருளாளர் பாபு நன்றி கூறினார்.