/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தெய்வ தமிழ் பேரவை கடலுாரில் ஆர்ப்பாட்டம்
/
தெய்வ தமிழ் பேரவை கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 21, 2024 07:44 AM

கடலுார்: வடலுார் வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தெய்வ தமிழ் பேரவை மற்றும் வள்ளலார் பணியகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலுார் தலைமை தபால் நிலையம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார்.
வள்ளலார் பணியகம் வெங்கட்ராமன், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் தலைவர் சித்தர்மூங்கிலடியார் முன்னிலை வகித்தனர்.
இதில், தமிழக அரசு வடலுார் வள்ளலார் சத்தியஞான சபை பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், வெளியில் அமைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, ராஜயோக சித்தர் பீடம் வடகுரு மடாதி பதி குச்சனுார் கிழார்,தெய்வத்திருமுறை வழிபாட்டு இயக்கம் மோகன சுந்தரம், வள்ளலார் பணியகம் ராஜமாணிக்கனார், முருகன், தெய்வ தமிழ் பேரவை புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் ராஜாராம், தமிழ் ஆன்மீக பேரவை ராஜேந்திரன் மற்றும் இளங்கோ, அருணபாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வள்ளலார் பணியகம் சுப்பிரமணிய சிவா நன்றி கூறினார்.

