ADDED : செப் 21, 2024 06:27 AM

கடலுார்: கிராம நிர்வாக அலுவலர்களை டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் இருந்து விடுவிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலுார் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் டிஜிட்டல் கிராப் சர்வே பயிர் கணக்கீடு செய்ய வேண்டும் என அதிகாரிகள் வி.ஏ.ஓ.,க்களை கூடுதல் பணியில் ஈடுபடுத்துவதை கண்டித்தும் , இந்த கூடுதல் கணக்கெடுப்பு பணியில் இருந்து விடுவிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டமைப்பு தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர்கள் விஸ்வநாதன், பக்கிரிசாமி கண்டன உரையாற்றினர். வட்ட செயலாளர் குமாரசாமி உள்ளிட்ட கடலுார் வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.