/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் - புதுச்சேரி இடையே ரயில்பாதை கேட்டு ஆர்ப்பாட்டம்
/
கடலுார் - புதுச்சேரி இடையே ரயில்பாதை கேட்டு ஆர்ப்பாட்டம்
கடலுார் - புதுச்சேரி இடையே ரயில்பாதை கேட்டு ஆர்ப்பாட்டம்
கடலுார் - புதுச்சேரி இடையே ரயில்பாதை கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 10, 2024 05:40 AM

கடலுர் : கடலுார்- புதுச்சேரி இடையே ரயில்பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி, கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில், அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். ஆலோசகர்கள் கிருஷ்ணமூர்த்தி, சிவராமன், புருேஷாத்தமன், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். இணைப் பொதுச் செயலாளர் தேவநாதன் வரவேற்றார். பொதுச் செயலாளர் வெங்கடேசன் விளக்க உரையாற்றினார்.
மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன் துவக்க உரையாற்றினார். சிறப்புத் தலைவர் மருதவாணன் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், மாநகர பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு ரவி, குரு ராமலிங்கம், சுப்புராயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆந்திரா அரசு பாலாற்றில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும். தமிழகத்தில் நதிநீர் இணைப்பு அதிக நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும்.
கடலுார்-புதுச்சேரி இடையே ரயில்பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பொருளாளர் ரமணி நன்றி கூறினார்.

