நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி பி.டி.ஒ., அலுவலகம் முன்பு, எல்.என்.புரம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பாரதி நகர் மக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் ஊராட்சியில் பாரதிநகர்,அய்யனார்கோவில், புதுநகர், வீராணம் வாய்க்கால் பகுதி மக்கள், அடிப்படை மக்கள் பிரச்சனைகளை வலியுறுத்தி பி.டி.ஒ., அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பாரதிநகர் வளர்ச்சி கூட்டமைப்பு தலைவர் மணி தலைமை தாங்கினார். மா.கம்யூ., நகர செயலாளர் உத்திராபதி வரவேற்றார். நிர்வாகிகள் சவுரிநாதன், சின்னராசா, எழுமலை, விஜி முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தப்பட்டது.