நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : வடலுாரில் உள்ள வள்ளலார் பெருவெளி மையத்தில், தமிழக அரசு சார்பில் ரூ.100 கோடி மதிப்பில், வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த மையத்தை வள்ளலார் பெருவெளி மையத்தில் அமைக்காமல், வேறு இடத்தில் அமைக்க வலியுறுத்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில், விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, ஏழைகள் முன்னேற்ற கழக தலைவர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார்.
இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் கோகுல கிறிஸ்டிபன், தமிழ் வேங்கை, கொளஞ்சிநாதன், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர் சிவஞானசம்பந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இதில், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

