
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:கடலுார் ஜவான்பவன் அருகில் இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜெயராஜ், அரிகிருஷ்ணன், அரசன், பரிமளா, தேவராஜ்முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் துரை, துணை செயலாளர் குளோப், மாநகர செயலாளர் நாகராஜ், வட்ட துணை செயலாளர்கள் முருகன், பன்னீர்செல்வம், வட்ட பொருளாளர் வளர்மதிவாசுகி கண்டன உரையாற்றினர்.
கடலுார் சிப்காட் லாயல் சூப்பர் பேப்ரிக்ஸ் கம்பெனியில் சாயநீர் கழிவுதொட்டி உடைந்துள்ளதை முன்கூட்டியே எச்சரித்தும்கண்டுகொள்ளாத நிர்வாகத்தை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.