நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் சமதர்ம மக்கள் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார்.
நிறுவனத் தலைவர் மாரியப்பன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகி மணிகண்டன், நகர செயலாளர் சுரேஷ்குமார், ஜெயராமன், அலெக்ஸ், சுரேஷ், சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கடலுார் சிப்காட்டில் தனியார் தொழிற்சாலையில் டேங்க் வெடித்து விபத்து ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.