நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், ஒப்பாரி போராட்டம் நடந்தது.
மாவட்ட துணை தலை வர் மணித்தேவன் தலைமை தாங்கினார். கணபதி, இளங்கோவன், நல்லதம்பி, மல்லிகா, முத்துசாமி முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் முருகேசன் வரவேற்றார். மாவட்ட தலைவர்கள் தங்கவேல், சுமதி, செயலாளர்கள் நாட்டுத்துரை, கிருஷ்ணமூர்த்தி, வட்ட செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட துணை தலைவர் ஞானசேகரன் நன்றி கூறினார்.