நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், ; விருத்தாசலம் நகராட்சி அலுவலகம் முன், இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் அய்யப்பன் முன்னிலை வகித்தார்.மாவட்ட செயலாளர் கோகுல கிறிஸ்டீபன் பேசினார். நகர குழு நிர்வாகிகள் கர்ணா, பீர் முகமது, ஜெயக்குளமார் குழந்தைவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
பூதாமூர் அம்மன்கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயை துார்வார வேண்டும். தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.