நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் பாலக்கரை யில், மா.கம்யூ., கட்சி சார் பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வெனிசுலா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், மா.கம்யூ., நகர செயலாளர் சங்கரய்யா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலர் குமரகுரு, கம்மாபுரம் செயலர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயற்குழு ரவிச்சந்திரன், தொழிற்சங்க தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உருவபொம்யை எரிக்க முயன்றனர். போலீசார் உருவபொம்யை பறிமுதல் செய்தனர்.

