
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் செம்மண்டலத்தில் தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க கிளைத் தலைவர் து ளசி தலைமை தாங்கினார். சங்க தலைவர் ரமேஷ் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், இணை செயலாளர் ஆதிசங்கரன், துணைத்தலைவர் பாபு பங்கேற்று பேசினர்.
இதில், ஆர்ப்பாட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பயிற்றுனர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
கிளை பொருளாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

