ADDED : அக் 21, 2026 08:00 PM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சி பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருத்தாசலம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில துணைத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் ராமநாதன், ஜெயமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜிவ்காந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.
அதில், மருத்துவக் காரணங்கள், வயது முதிர்வு, குடும்ப சூழல் மற்றும் குழந்தைகளை பராமரிக்கும் பெண் ஊழியர்களின் நியாயமான தேவைகளை கருத்தில் கொண்டு நிலுவையில் உள்ள விருப்பப் பணியிட மாறுதலை உடனடியாக வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.
