தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/டெங்கு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை ஆய்வு

டெங்கு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை ஆய்வு

டெங்கு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை ஆய்வு


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 04:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 04:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறிஞ்சிப்பாடி: டெங்கு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ அலுவலர் ஆய்வு செய்தார்.

குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட என்.ஆர் ராஜா நகர் பகுதியில், வடலூர் வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் மற்றும், தண்ணீர் தேங்கும் பகுதிகளை பார்வையிட்டு, அவற்றை உடனடியாக அகற்றவும், வீடு வீடாக கொசுப்புழு ஆய்வு மேற்கொண்டு, கொசு உற்பத்தி மூலங்களை கண்டறிந்து அகற்றவும், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்து தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுகவும் அறிவுறுததினார். சுகாதார ஆய்வாளர் பார்த்திபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us