ADDED : செப் 27, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் சுகாதார துறை அதிகாரிகள் தீவிர டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டனர்.
விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டை, ராமன்தெரு, மில்லர் தெரு, ஆகிய பகுதிகளில் இரண்டு பள்ளி சிறுமிகளுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார துறையினர் சார்பில், நேற்று அப்பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நகராட்சி கமிஷ்னர் நாகராஜ், தலைமையில், மாவட்ட மலேரியா அலுவலர் கணபதி அடங்கிய குழுவினர் அப்பகுதியில் வீடுவீடாக சென்று டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் பொருட்களை அகற்றி, கொசு மருந்து அடித்தனர்.
