ADDED : செப் 27, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி அருகே சாராயம் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி மதுவிலக்கு போலீசார், இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் மேல்குமாரமங்கலம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பாலம் அருகே வந்த சந்தேகப்படும்படி நின்றிருந்த, 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள், பண்ருட்டி விழமங்கலம் பகுதியைசேர்ந்த குணசேகரன்,52; திருத்துறையூர் குயவர் தெருவை சேர்ந்தர் சிவபூசனம் மகன் விக்னேஷ்,28; என தெரிய வந்தது.
மேலும், புதுச்சேரி மாநில சாராயம் பாக்கெட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.
பண்ருட்டி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து, 8 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
