ADDED : நவ 15, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த நத்தம் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசு உற்பத்தி தடுப்பு புகைமருந்து அடிக்கும் பணி நேற்று நடந்தது.
நத்தம் ஊராட்சி தலைவர் கலையரசிசேதுராஜன் பணியை துவக்கி வைத்தார். மருங்கூர் வட்டார மருத்துவர் அறிவொளி தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் லோகநாதன், கவுதம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.