
பெண்ணாடம் பெண்ணாடம் அடுத்த இறையூர் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு பணி நடந்தது.
தொளார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த பணிக்கு, நல்லுார் வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் நாட்டுதுரை தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் விஜயரங்கன், பணிக்கள பொறுப்பாளர் முத்துலட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் மூலம் கொசுவினால் பரவும் நோய்கள் குறித்தும், தடுக்கும் வழிமுறைகள், குடிநீரில் குளோரினேஷன் ஆய்வு, காய்ச்சல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, தொழுநோய் விழிப்புணர்வு, நலக்கல்வி வழங்கப்பட்டது.
ஊராட்சி தலைவர் சுதா ரத்தினசபாபதி, ஊராட்சி செயலாளர் குமார், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
விருத்தாசலம்
கம்மாபுரம் ஒன்றிய சுகாதாரத்துறை சார்பில் சி.கீரனுார் கிராமத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருண்ராஜ், கார்மாங்குடி மருத்துவ அலுவலர் சுடர் நாச்சியார் முன்னிலையில் சுகாதார ஆய்வாளர் ராஜா, விஜயகுமார் ஆகியோர் வீடுகள் தோறும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து கள ஆய்வு செய்தனர்.அப்போது, மழைநீர் தேங்கியிருந்த பிளாஸ்டிக் டிரம், கல் உரல், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் மட்டைகளை அப்புறப்படுத்தி, தொற்று எதிர்ப்பு மருந்து தெளித்து சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் காய்ச்சல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.