ADDED : செப் 13, 2026 04:03 PM
அ நிறம் | அளவு
திட்டக்குடி, செப். 14–
திட்டக்குடி அடுத்த செவ்வேரி ஊராட்சியில் டெங்கு முன் தடுப்பு முகாம் நடந்தது.
ஈ.கீரனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த முகாமிற்கு, மருத்துவ அலுவலர் ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட மலேரியா அலுவலர் கணபதி, வட்டார சுகாதார ஆய்வாளர் சங்கர், சுகாதார ஆய்வாளர்கள் விஜயரங்கன், அபினேஷ், அதிகாயன், மதனகோபால் ஆகியோர் கொண்ட குழுவினர் வீடு வீடாக சென்று கொசுப்புழு ஒழிப்பு, காய்ச்சல் கண்காணிப்பு, குடிநீரில் குளோரினேஷன் ஆய்வு, புகை மருந்து அடித்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கிராம மக்களுக்கு நலக்கல்வி வழங்கப்பட்டது.
இதேபோல், பெண்ணாடம் அடுத்த காரையூர் ஊராட்சியில் கணபதிகுறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு முன் தடுப்பு முகாம் நடந்தது.
