ADDED : செப் 13, 2026 03:21 PM
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் - பரங்கிப்பேட்டை சாலை, புதுச்சத்திரம் ரயில்வேகேட் அருகே, பைப் லைன் உடைந்து தண்ணீர் விரயமாகி வருகின்றது.
புதுச்சத்திரம் - பரங்கிப்பேட்டை சாலையில், ஊராட்சி குடிநீர் பைப் லைன் செல்கிறது. இந்நிலையில் புதுச்சத்திரம் ரயில்வேகேட் அருகே, அந்த பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் விரயமாகி வருகிறது.
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டபைப் லைனில் உடைப்பு ஏற்பட்டதாக கருதிய, அத்திட்ட பணியாளர்கள், பைப் லைனில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை தோண்டி பார்த்தபோது, அவர்களுடைய பைப் லைனில் உடைப்பு ஏற்படவில்லை. ஊராட்சி பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டதாகக்கூறி அதைமூடிவிட்டு சென்றனர்.
எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, புதுச்சத்திரம் ரயில்வேகேட் அருகே, உடைந்த பைப் லைனை சீரமைக்க, அரசு அதிகாரிகள் நடவடிக்கையில் எடுக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
