எஸ்.டி.சியோன் பள்ளியில் திறன் ஊக்குவிப்பு போட்டி
எஸ்.டி.சியோன் பள்ளியில் திறன் ஊக்குவிப்பு போட்டி
ADDED : செப் 13, 2026 03:21 PM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த சோழத்தரம் எஸ்.டி.சீயோன் பள்ளியில் மாணவர்கள் எதிர்காலங்களில் தொழில்முனைவோர் திறன் ஊக்குவிப்பு மாதிரி கடைகள் அமைத்தல் போட்டி நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் பிரவீன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் இவான்சி முன்னிலை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் பாபு வரவேற்றார். சிதம்பரம் மாலன் ஜூவல்லரி உரிமையாளர் மங்கேஷ்குமார் நிகழ்ச்சியை துவங்கி வைத்து மாணவ, மாணவிகள் அமைத்துள்ள உணவு கடை, பாரம்பரிய உணவகங்கள், தானியங்கள் கைவினை பொருட்கள் உள்ளிட்ட 126 கடைகளை பார்வையிட்டு பாராட்டி கல்வி உபகரணங்களை வழங்கினார்.
ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்களின் கடைகளை நேரடி பார்வையிட்டு பொருட்களை வாங்கி சென்றனர்.இதில், மாலன் ஜூவல்லரி மேலாளர் தேவநாதன் மக்கள் தொடர்பு அதிகாரி சேகர், ரகு, சேத்தியாத்தோப்பு பள்ளி பொறுப்பாசிரியர் எட்வர்ட், ஆசிரியர் அரிகிருஷ்ணன்,உடற்கல்வி ஆசிரியர் மணிகண்டன், சமூக சேவகர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆசிரியர் விமலா நன்றி கூறினார்.
