ADDED : ஜன 26, 2026 03:47 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் சுப்புராய செட்டி தெரு வள்ளி விலாஸ் ஜூவல்லரி, புதுச்சேரி ராமஜெயம் அறக்கட்டளை ஆகியன சார்பில் இலவச பல் சிகிச்சை முகாம் நடந்தது.
கடலுார், திருவந்திபுரம் தனகோடி திருமண மண்டபத்தில் நடந்த இலவச பல் சிகிச்சை முகாமை வள்ளி விலாஸ் ஜூவல்லரி உரிமையாளர் முரளி தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.
முகாமில், பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு பல் கட்டுதல், சீரமைத்தல் சுத்தம் செய்தல், அடைத்தல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
டாக்டர்கள் விஷ்ணு பிரசாத், அனிருத் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
ஏற்பாடுகளை வள்ளி விலாஸ் ஊழியர்கள் செய்திருந்தனர்.
