/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் துணை முதல்வர் உதயநிதி நிவாரண உதவி
/
கடலுாரில் துணை முதல்வர் உதயநிதி நிவாரண உதவி
ADDED : டிச 02, 2024 06:55 AM

கடலுார் : கடலுாரில் மழை பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு துணை முதல்வர் உதயநிதி நிவாரண பொருட்களை வழங்கினார்.
பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடலுார் மாவட்டத்தில் 17 நிவாரண முகாம்களில் 703 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். துணை முதல்வர் உதயநிதி, கடலுார் புருஷோத்தமன் நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணியை பார்வையிட்டார்.
தொடர்ந்து தனியார் மகளிர் கல்லுாரியில் தங்க வைக்கப்பட்டுள்ள 256 பேருக்கு பிஸ்கெட், பால், அரிசி, பிரட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பொன்முடி, செந்தில்பாலாஜி, சிவசங்கர், கணேசன், எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச்செயலர் ககன்தீப்சிங் பேடி உட்பட பலர் உடனிருந்தனர்.