ADDED : அக் 30, 2025 07:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: தொழுநோய் கண்டு பிடிப்பு முகாம் பணியினை துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
பண்ருட்டி நகராட்சி ப குதியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், தீவிர தொழு நோய் கண்டுபிடிப்பு முகாம் கடந்த 24 ம்தேதி முதல் துவங்கி வரும் நவம்பர் 10ம்தேதி வரை நடக்கிறது.
தொழுநோய் கண்டறியும் குழுவினர் பண்ருட்டி அம்பேத்கர் நகர், தண்டுப்பாளையம், திருவதிகை எம்.ஜி.ஆர்.நகர் ஆகிய பகுதியில் ஆய்வு செய்தனர். தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் பணியினை துணை இயக்குனர் சித்திரைச் செல்வி ஆய்வு செய்தார்.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அறிவொளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

