ADDED : நவ 28, 2025 04:57 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் நகர தி,மு.க., சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார்.
பொதுக்குழு உறுப்பினர் அரங்க பாலகிருஷ்ணன், நகர அவை தலைவர் செங்குட்டுவன், நகர துணை செயலாளர் ராமு, நம்பிராஜன், நகராட்சி கவுன்சிலர் பாண்டியன், நகர பொருளாளர் மணி கண்டன், டாக்டர் முருகதாஸ், வழக்கறிஞர் அருள்குமார், நகராட்சி கவுன்சிலர் அன்சர் அலி ஆகியோர் முன்னிலை வகித்த னர்.
நகர இளைஞரணி அமைப்பாளர் பொன்கணேஷ் வரவேற்றார்.
நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில், நிர்வாகிகள் குருசரஸ்வதி, சந்தானலட்சுமி சுந்தரமூர்த்தி, இளைஞரணி தளபதிகுமார், நிஷாந்த், சரவணன், சிவா, வெங்கடேசன், ரவிச்சந்திரன், முத்துக்குமரன், சத்தியராஜ், ராஜா, துரை கோவிந்தசாமி, தமிழ்வாணன், ராஜகுமார், விஜி, உஷாபாலு, தீபா மாரிமுத்து, கிருஷ்ணராஜ், பாலா, வினோத், பாலு, பரந்தாமன், முருகன், எஸ்.முருகன், இனியராஜ், மணிரான், கலியன், அசோக், வசந்த், பாபுகணேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

