/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு
/
கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED : நவ 28, 2025 04:58 AM

விருத்தாசலம்: துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில், வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், சிறப்பு அபி ேஷகம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.
ஒன்றிய துணை செயலாளர்கள் தர்ம மணிவேல், கோவிந்தராசு, அன்பழகி ராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் திருஞானம், பாலபாரதி, வீரபாண்டியன், வாஞ்சிநாதன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் கருணாநிதி, மாவட்ட பிரதிநிதிகள் சிவக்குமார், மதியழகன், பாலகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் கோவிந்தசாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வெங்கடேசன், தகவல் தொழில்நுட்ப அணி சவுந்தரராஜன், ஜெகதீஸ்வரன், பொறியாளர் அணி ஜெய்கிருஷ்ணன், தொண்டரணி கோபாலகிருஷ்ணன், மாணவரணி ராஜிவ்காந்தி, விவசாய தொழிலாளர் அணி மணிகண்டன், வர்த்தக அணி பரமகுரு, கலை இலக்கிய அணி இளையபெருமாள், தொழிலாளர் அணி பிரபு, அயலக அணி சம்பத்குமார், செஞ்சியார், முன்னாள் ஊராட்சி தலைவர் துரைமுருகன் கிளை செயலர்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள், பாக இணையதள முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

