ADDED : டிச 14, 2024 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : தொடர்மழை மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலை எதிரொலியாக கடலுாரில் மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால், மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தொடர்மழை காரணமாக கடலுாரில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இரண்டு நாட்களாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. இதனால் தங்கள் விசைப்படகுகள், மோட்டார் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். மீன்வரத்து இல்லாததால், எப்போதும் பிசியாக காணப்படும் கடலுார் முதுநகர் மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

