/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் ... தவிப்பு ; முக்கிய சிகிச்சைகளுக்கு டாக்டர்கள் இல்லை
/
கடலுார் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் ... தவிப்பு ; முக்கிய சிகிச்சைகளுக்கு டாக்டர்கள் இல்லை
கடலுார் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் ... தவிப்பு ; முக்கிய சிகிச்சைகளுக்கு டாக்டர்கள் இல்லை
கடலுார் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் ... தவிப்பு ; முக்கிய சிகிச்சைகளுக்கு டாக்டர்கள் இல்லை
ADDED : செப் 25, 2025 03:13 AM

கடலுார் : கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் அவசர காலத்தில் உயர் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால், ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகள் வெளி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பும் அவல நிலை உள்ளது.
கடலுாரில் அரசு தலைமை மருத்துவமனை கடந்த 1907ம் ஆண்டு துவங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் இருந்து தினசரி 2,000த்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 750 படுக்கை வசதி உள்ளது. 700க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக உள்ளனர்.
இங்கு, பல் மருத்துவம், பொது மருத்துவம், எலும்பு முறிவு, கண் மருத்துவம், மகப்பேறு, தோல், சித்த வைத்தியம், ேஹாமியோப தி, ஆயுஷ் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
பிரதான மருத்துவமனை கட்டடத்திற்கு பின்புறம் மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் 25 குழந்தைகள் வரை பிறக்கின்றன. குழந்தை பேறுக்கு முக்கியத்துவம் அளித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பொதுவாக மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் வந்தாலும் உடனடியாக மரணத்தை தழுவுவதில்லை. ஆனால் இருதயம் மட்டும் சரியாக வேலை செய்யவில்லையென்றால் விரைவில் 'ஹார்ட் அட்டாக்' ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் நிலை உள்ளது.
இதனால்தான் இருதய மருத்துவர்கள் இருப்பது அவசியம். ஆனால் தலைமை மருத்துவமனையாக இருந்தும் இம்மருத்துவமனையில் இருதய டாக்டர்கள் இல்லாமல் உள்ளனர். அதே போன்று, நரம்பியல் சிறப்பு மருத்துவர் நீண்ட காலமாக இல்லை. ரேடியாலாஜி மருத்துவர் இல்லை.
முக்கிய பிரிவு மருத்துவர்கள் இல்லாததால் மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வருபவர்கள் முதலுதவி செய்யப்பட்டு புதுச்சேரி அரசு மருத்துமவனை, ஜிப்மர், முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி விடும் அவல நிலை உள்ளது. அவ்வாறு சிபாரிசு கடிதம் பெற்று செல்லும் நோயாளிகளை புதுச்சேரியிலும் சேர்க்க மறுக்கின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதனால் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள், எலும்பு முறிவு, பிரசவம் உள்ளிட்டவைகளுக்கு சாதாரண அறுவை சிகிச்சைகள் மட்டுமே செய்யப்படுகின்றன. தலையில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லாததால் சென்னை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.
கடலுார் அரசு மருத்துவமனையில் பொது மருத்துவத்தில் கூட ஒரு சில டாக்டர்கள் முறையாக வெளி நோயாளிகளை பார்க்காமல் சுற்றி வருகின்றனர்.
ஓரிரு மணி நேரம் மருத்துவமனையில் நேரம் செலவிடுவதே சில மருத்துவர்களுக்கு பெரிய விஷயமாக உள்ளது.
பிற மாவட்டங்களில் மருத்துவக் கல்லுாரிகள் உள்ளதால், போதிய உபகரணங்கள், சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர்.
இதனால், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்கிறது. இங்கு, அதிநவீன மருத்துவக் கருவிகள் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். முறையான டாக்டர்கள் இருந்தால் தான் மாவட்ட மக்கள் வெளியூருக்கு பரிந்துரைக்கப்படாமல், அனைத்து உயர் தர சிகிச்சையும்செய்ய முடியும். எனவே, மாவட்ட நிர்வாகம், டாக்டர் பணியிடங்களைநிரப்ப நடவடிக்கை எடுக் க வேண்டும்.