ADDED : செப் 25, 2025 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார் : மதுபாட்டில் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்
வடலுார் எஸ்.ஐ., ராஜராஜன் தலைமையிலான போலீசார் நேற்று காலை, வடலுார், கோட்டக்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்குள்ள வீடு ஒன்றின் பின்புறம், சட்டவிரோதமாக புதுச்சேரி மதுபாட்டில் விற்பனை செய்வது போலீசாருக்கு தெரிய வந்தது.
மதுபாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி, 54, என்பவர் மீது வழக்குப் பதிந்த போலீசார், அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 20க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள், பணம், மொபைல் போன் ஆகியவற்றை போலீசார் பறிமு தல் செய்தனர்.