/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வளர்ச்சியடைந்த பாரதம்: மத்திய அமைச்சர் திட்டவட்டம்
/
வளர்ச்சியடைந்த பாரதம்: மத்திய அமைச்சர் திட்டவட்டம்
வளர்ச்சியடைந்த பாரதம்: மத்திய அமைச்சர் திட்டவட்டம்
வளர்ச்சியடைந்த பாரதம்: மத்திய அமைச்சர் திட்டவட்டம்
ADDED : பிப் 25, 2026 06:34 AM

நெய்வேலி :நெய்வேலி, வட்டம் 11ல்'சுரங்க உற்பத்திக்கு அப்பால்-சுரங்க மூடல் மற்றும் மறுபயன்பாடு' என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய பயிலரங்கம் நேற்று துவங்கியது.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, பயிலரங்கை துவக்கி வைத்தார். நிலக்கரி அமைச்சக செயலாளர் விக்ரம் தேவ் தத், கூடுதல் செயலாளர்கள் ரூபிந்தர் ப்ரார், சனோஜ் குமார் ஜா, நிலக்கரி கட்டுப்பாட்டாளர் சஜீஷ்குமார் முன்னிலை வகித்தனர். என்.எல்.சி., இந்தியா நிறுவன சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி, கோல் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சாய்ராம், சிங்கரேணி காலரீஸ் நிறுவன தலைவர் புத்த பிரகாஷ் ஜோதி உட்பட பலர் பங்கேற்றனர். பயிலரங்கில்இந்தியா முழுவதிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
சுரங்கப் பணிகள் நிறைவடைந்த நிலங்களை அறிவியல் ரீதியாகவும், உள்ளூர் மக்களின் நலனை மையப்படுத்தியும் எவ்வாறு மறு பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து வழிகாட்டு வரைபடத்தை உருவாக்கும் வகையில் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பேசுகையில், '2047ம் ஆண்டிற்குள் இந்தியாவைவளர்ச்சியடைந்த பாரதமாக மாற்ற வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை.சுரங்கத் துறை நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்தியாக இருந்தாலும், சுரங்கப் பணிகள் முடிந்த நிலங்களை சுற்றுச்சூழல் ரீதியாக சீரமைத்து பராமரிப்பதே சமூகத்திற்கு வழங்கும் உண்மையான பங்களிப்பாக அமையும். சுரங்கங்கள் மூடப்படுவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாகும். இது நிலத்தை இழந்த மக்களுக்கான புதிய தொடக்கம் ஆகும்.சுரங்கப் பணிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் அதிகாரிகள் கவனத்துடன் செயல்பட வேண்டும். மிக குறுகிய காலத்தில் அறிவியல் ரீதியாக அதிக எண்ணிக்கையிலான சுரங்கங்களை மூடி சீரமைத்ததற்காக கின்னஸ் உலக சாதனை படைக்க முயற்சிக்க வேண்டும்.நிலக்கரி மற்றும் சுரங்கத் துறையில் நீடித்த மற்றும் நிலையான சீரமைப்புப் பணிகளில் இந்தியாவை உலகில் முதன்மையான நாடாக நிலைநிறுத்த வேண்டும் என்பதே தனது இலக்கு' என்றார்.
என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி பேசுகையில், 'சுரங்கப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட 6,473 ஹெக்டேர் நிலத்தில், ஏற்கனவே 3,115 ஹெக்டேர் நிலத்தை என்.எல்.சி., இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது.
அதில், உயர்தொழில்நுட்ப விவசாயம், மண்ணில்லாத ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம் மற்றும் 200 பசுக்களை கொண்ட நவீன கோசாலை போன்ற புதுமை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 25,000 ஹெக்டேர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.62 கிராமங்களுக்குத் தடையற்ற குடிநீர் வழங்கப்படுகிறது.சென்னை மாநகரின் குடிநீர் தேவையில் மூன்றில் ஒரு பங்கை என்.எல்.சி., பூர்த்தி செய்கிறது. 2030ம் ஆண்டிற்குள் 10 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை எட்டுவதை நோக்கம் ஆகும்' என்றார்.

