/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திட்டப்பணிகளில் வளர்ச்சி அமைச்சர் பெருமிதம்
/
திட்டப்பணிகளில் வளர்ச்சி அமைச்சர் பெருமிதம்
ADDED : டிச 19, 2025 06:36 AM

சிறுபாக்கம்: சிறுபாக்கம் அடுத்த எஸ்.புதுார் ஊராட்சியில் மக்கள் குறை கேட்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மங்களூர் வடக்கு தி.மு.க., ஒன்றிய செயலர் சின்னசாமி தலைமை தாங்கினார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் பங்கேற்று, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை துவக்கி வைத்து, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின், சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தாசில்தார் செந்தில்வேல், மங்களூர் முன்னாள் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், மங்களூர் பி.டி.ஓ., சண்முக சிகாமணி, தி.மு.க., நிர்வாகிகள் ராமதாஸ், வெங்கடேசன், நிர்மல்குமார், பழனிவேல், செல்வராசு, சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல், ரெட்டாக்குறிச்சி, அ.களத்துார், கொளவாய் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் மக்கள் குறை கேட்டறிந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அமைச்சர் கணேசன் பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதும் கிராமங்கள் தோறும் சாலை, குடிநீர், பொது சுகாதாரம், கான்கிரீட் வீடுகள் உள்ளிட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. எப்போதும் இல்லாத வகையில் திட்டப்பணிகளில் வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது,' என்றார்.

