/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பருவ மழை குறித்து அறிய மொபைல் ஆப் உருவாக்கம்
/
பருவ மழை குறித்து அறிய மொபைல் ஆப் உருவாக்கம்
ADDED : செப் 29, 2024 06:28 AM
கடலுார், : பருவ மழை குறித்து, டிஎன் அலர்ட் ஆப் மூலம், பொதுமககள் எளிதில் தகவல் அறிந்து கொள்ளலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. பருவ மழை குறித்து பொதுமக்கள் எளிதில் தகவல் அறியும் வகையில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் 'டிஎன் அலார்ட்' என்ற மொபைல் போன்ற செயலியை உருவாக்கியுள்ளது.
இந்த செயலி மூலம் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் மற்றும் தெரிந்து கொள்ள விரும்பும் இடத்திற்கான வானிலை, அறிவிப்பு, மழைப் பொழிவு, இடி, மின்னல், நீர் தேக்கம் மற்றும் வெள்ள அபாயம் குறித்த முன்னெச்சரிக்கைகள், ஆலோசனைகள் குறித்து அறியலாம்.
மேலும், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து செல்லும் இடர்பாடுகள் குறித்த புகார் பதிவுகள், மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண், மாநில அவசர கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை தெரிந்துக்கொள்ள முடியும்.
எனவே, பொதுமக்கள் TN-ALERT என்ற மொபைல் செயலியை, மொபைல் போனில் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். கூறப்பட்டுள்ளது.