/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வளர்ச்சி திட்டப் பணிகள் : கலெக்டர் ஆய்வு
/
வளர்ச்சி திட்டப் பணிகள் : கலெக்டர் ஆய்வு
ADDED : ஏப் 04, 2025 04:58 AM
புவனகிரி: மேல்புவனகிரி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
மேல்புவனகிரி ஒன்றியம், கிராம ஊராட்சி பகுதியில் 280 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடு கட்டும் பணிகள் நடந்து வருகிறது. ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியின் கீழ் 5.59 கோடி ரூபாய் மதிப்பில் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.
இப்பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும், ஊரக வளர்ச்சித்துறை செயற் பொறியாளர் வரதராஜபெருமாள், பி.டி.ஓ., க்கள்., சக்தி, சரவணன் உடனிருந்தனர். பின், மேலமூங்கிலடியில் கலைஞர் கனவு இல்லம் கட்டுமானப் பணிகள் குறித்தும், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் கல்வி, எடை, உயரம், ஊட்டச்சத்து விகிதம் குறித்து ஆய்வு செய்தார்.