/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு
/
வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு
ADDED : ஏப் 18, 2025 04:44 AM

கடலுார்: குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதிநாராயணபுரம், ரெங்கநாதபுரம், கண்ணாடி பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம்  திட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணிகள் மற்றும் ரங்கநாதபுரம் பகுதியில் பிரதம மந்திரி ஜன்மன் திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு  செய்து, பணிகளை தரமாகவும், விரைவாக முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆதிநாராயணபுரம் அங்கன்வாடி மையத்தில் தினசரி குழந்தைகள் வருகை பதிவேடு, எடை மற்றும் ஊட்டச்சத்து விகிதம் குறித்து  பராமரிக்கப்படும் பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, அங்கன்வாடி மைய பணியாளர்கள் குழந்தைகள் பராமரிப்பில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தினார்.
கண்ணாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் அடிப்படை  கற்றல்திறன் குறித்து ஆய்வு செய்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

