/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வளர்ச்சி திட்டப் பணிகள்: கலெக்டர் ஆய்வு
/
வளர்ச்சி திட்டப் பணிகள்: கலெக்டர் ஆய்வு
ADDED : மே 26, 2025 01:03 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சி.புதுப்பேட்டை, தில்லைவிடங்கன், சி.முட்லுார் மற்றும் நக்கரவந்தன்குடி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடக்கும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
பின், அவர், கூறுகையில், 'வீடு இல்லாத ஏழை மக்களுக்கு சொந்த வீடு கட்டும் கனவை நிறைவேற்றிடும் வகையில் ஒரு பயனாளிக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டிக் கொள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டதில் 2024-2025ம் ஆண்டிற்கு 189 வீடுகளும், 2025-2026ம் ஆண்டிற்கு 256 வீடுகளும் ஒதுக்கீடு செய்து, கட்டுமான பணிகளை தரமாக மேற்கொள்வது மற்றும் விரைவுப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நக்கரவந்தன்குடி ஊராட்சியில் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 25 வீடுகள், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 22 வீடுகள், பிரதம மந்திரி ஜென்மன் திட்டத்தின் கீழ் 5 வீடுகள் என 52 வீடுகள் கட்டுமான பணிகள் நடப்பதையும் ஆய்வு செய்யப்பட்டது' என்றார்.
சப் கலெக்டர் கிஷன்குமார், பி.டி.ஓ.,க்கள் பார்த்திபன், சதீஷ்குமார், ஒன்றிய சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன் உடனிருந்தனர்.